HEADLINES | வந்தே மாதரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் To கேஎன் நேரு மீது 1020 கோடி ஊழல் புகார்!
வந்தே மாதரம் பாடல் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளுக்கு இடையே விவாதம், மேற்கு வங்கத்தில் தேர்தல் வருவதால் வந்தே மாதரத்தை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு, எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம், நாட்டின் பல்வேறு நகரங்களில் இண்டிகோ விமான சேவைகள் இன்றும் ரத்து, விமானச் சேவை விதிமீறல் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும், திமுகவுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்படுவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு, புதுச்சேரியில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தும் தவெக தலைவர் விஜய், இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் டி20 போட்டியில் மோதல்.. உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்...
வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், இஸ்லாமியர்களுக்கு அஞ்சி வந்தே மாதரம் பாடலின் ஒரு பகுதியை நேரு நீக்கினார் என்றும் பிரதமர் மோடி விமர்சனம்... சுதந்திர இயக்கத்தின் குரலாக வந்தேமாதரம் மாறியதாகவும் மக்களவையில் பேச்சு...
மேற்கு வங்கத்தில் தேர்தல் வருவதால் வந்தே மாதரத்தை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு.. எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் கடந்த காலத்தை மட்டுமே பிரதமர் பேசுவதாகவும் விமர்சனம்..
எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்... எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விவாதத்தை தொடங்கி வைக்கிறார்...
நாட்டின் பல்வேறு நகரங்களில் இண்டிகோ விமான சேவைகள் இன்றும் ரத்து... 24 மணிநேரத்திற்குள் உரிய விளக்கத்தை அளிக்க இண்டிகோ நிறுவனத்திற்கு டிஜிசிஏ ஆணை...
விமானச் சேவை விதிமீறல் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்... மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு உறுதி...
திமுகவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சிபிஐ, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம்... மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு...
அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் முறைகேடு... வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமைச்செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை கடிதம்...
திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அமலாக்கத் துறையை ஏவல் துறையாக்கியுள்ளது... அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் கே.என். நேரு அறிக்கை...
அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுகவின் ஊழல் கறை வேட்டிகள் கம்பி எண்ணப்போவது உறுதி என எடப்பாடிகே பழனிசாமி கருத்து... டெண்டர் முறைகேடு புகாரில் வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட தமிழக அரசுக்குஅண்ணாமலை வலியுறுத்தல்...
புதுச்சேரியில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தும் தவெக தலைவர் விஜய்... காவல் துறையினர் நிபந்தனைகளை ஏற்று கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம்...
புதுச்சேரி விஜய் கூட்டத்தில் பங்கேற்க 5ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி... தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தவெக தலைமை அறிவுறுத்தல்...
சிவகங்கையில் இறந்தவர் என கூறி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நாதக வேட்பாளர் பெயர்... வாக்காளர் பட்டியலுடன் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர் இந்துஜா.
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் முன்னிலை இன்று விசாரணை...
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்காதது ஏன்? மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்...
நேர சேமிப்பு குறைவாக இருக்கும் என்பதால் கோவை மக்கள் மெட்ரோவை பயன்படுத்த வாய்ப்பு குறைவு எனமத்திய அரசு பதில்... மதுரையில் தமிழக அரசின் மெட்ரோ திட்டத்தைவிட ரேபிட் பஸ் திட்டம் சிறப்பானதாக இருக்கும் எனவும் விளக்கம்...
கோவை, மதுரையைவிட குறைந்த மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கும் மெட்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது... கோவை தொழில் நகரம் மட்டுமல்ல; அந்த மண்டலத்தின் தலைநகர் போன்றது என திமுக கருத்து...
காவிரியில் 7 புள்ளி 35 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு... டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு...
கேரளாவில் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து நடிகர் திலீப் உள்ளிட்டோர் விடுவிப்பு... பாலியல் புகாருக்கு காரணமே மஞ்சு வாரியர்தான் என நடிகர் திலீப் பரபரப்பு குற்றச்சாட்டு...
ஜப்பானின் ஹோன்சு தீவில் 7.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்...
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் வறட்சியால் அதிகரிக்கும் பட்டினி... மழை பொய்த்ததால் பரிதவிக்கும் மக்கள்...
செஸ் கேண்டிடேட்ஸ் தொடருக்கு மீண்டும் தேர்வானார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா... CIRCUIT தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நிலையில் தேர்வு...
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தொடக்கம்... தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி...
சீனாவில் தொடங்கியது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள்... உடலில் குறையிருந்தாலும் திறமைக்கு குறைவில்லை என நிரூபித்த போட்டியாளர்கள்...
மலைச்சரிவில் மின்னல் வேகத்தில் சறுக்கிச்செல்லும் உலக சாம்பியன்ஷிப் போட்டி... உயிரை பணயம் வைத்து சறுக்கிச்சென்ற வீரர்கள்...

