\
புதுச்சேரி: மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி- 50-க்கும் மேற்பட்டோர் கைது

புதுச்சேரி: மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி- 50-க்கும் மேற்பட்டோர் கைது

புதுச்சேரி: மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி- 50-க்கும் மேற்பட்டோர் கைது
Published on

புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் மத்திய அரசு துரோகம் இழைத்ததாகக் கூறி, பிரதமரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 10 ஆயிரம் மருத்துவ இடங்களை தட்டிப்பறிக்கும் வகையில் கல்வி வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழு அறிக்கையை மத்திய அரசு முடக்கி வைத்ததாகக் கூறி தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் புதுச்சேரி அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் திடீரென பிரதமர் மோடியின் உருவபொம்மையை எடுத்த அவர்கள் அதை எரிக்க முயன்றனர். அப்போது அதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும்- பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும்,  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com