Amarnath Yatra
Amarnath YatraFile Image

தோசை, பூரி, பிரைடு ரைஸ், பரோட்டாக்கு தடை.. அமர்நாத் யாத்திரைக்கு அடுக்கடுக்கான கட்டுப்பாடுகள்!

அமர்நாத் யாத்திரைக்கு செல்லும்போது தோசை, சட்னி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
Published on

ஜம்மு-காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகை உள்ளது. இப்பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். அப்படி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 1ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 வரை நடக்க உள்ளது.

Amarnath Yatra
Amarnath Yatra

அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், 40-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “உடல் ஆரோக்கியத்திற்காக தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இமயமலை புனித ஸ்தலத்திற்கு யாத்திரை வரும் பக்தர்கள், தினமும் காலை மற்றும் மாலை என குறைந்தது 4 முதல் 5 கிமீ வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள், குறிப்பாக ஆக்ஸிஜனை மேம்படுத்துவதற்கான பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் 14 கிலோ மீட்டர் நடைபயணத்தைத் தொடங்குவதற்கு முன், அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டும் எடுத்து வர வேண்டும்.

Amarnath Yatra
Amarnath Yatra

அதன்படி புலாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், பரோட்டா, தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, வறுத்த பப்பாளி, வறுத்த மற்றும் துரித உணவுப் பொருள்கள், பானங்கள் என தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, சில அரிசி உணவுகளுடன் தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துச்செல்ல பரிந்துரைக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரோக்கிய நோக்கத்தில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com