நீட்-ஜே.இ.இ ஒத்திவைக்கலாமா? ஜார்க்கண்ட் முதல்வர் ட்விட்டர் கேள்விக்கு குவிந்த பதில்கள்

நீட்-ஜே.இ.இ ஒத்திவைக்கலாமா? ஜார்க்கண்ட் முதல்வர் ட்விட்டர் கேள்விக்கு குவிந்த பதில்கள்
நீட்-ஜே.இ.இ ஒத்திவைக்கலாமா? ஜார்க்கண்ட் முதல்வர் ட்விட்டர் கேள்விக்கு குவிந்த பதில்கள்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நீட் - ஜே.இ.இ தேர்வுகள் நடத்துவது தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்றை ட்விட்டரில் கேட்டிருந்தார். அவரது அழைப்புக்கு இதுவரை சுமார் 1.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிலளித்துள்ளனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நீட் - ஜே.இ.இ தேர்வுகள் குறித்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

“குறிப்பாக வருங்கால இளம் பொறியாளர் மற்றும் மருத்துவ நண்பர்கள் அனைவரிடமிருந்தும் கருத்துக்களைக் கேட்க விரும்புகிறேன். 

நீட் - ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் மாணவர்களாகிய நீங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வீர்களா? ” என ட்வீட் செய்திருந்தார் சோரான்.

‘ஆம், இல்லை மற்றும் தெரியாது’ என மூன்று ஆப்ஷன்களோடு இந்த கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தார் அவர்.

இதற்கு பதிலளித்த 1,76,977 பேரில் 79 சாதவிகிதத்தினர் இல்லை என பதில் தெரிவித்துள்ளனர். 

‘மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலன் குறித்து அரசுக்கு தொலைதூர அக்கறை இருப்பதாக தெரியவில்லை’ எனவும் ட்வீட் செய்திருந்தார் சோரன். 

தேர்வுகள் ஒத்திவைக்குமாறு ஹேமந்த் சோரன் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com