\
இந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Published on

இந்தியாவிற்கு மேற்படிப்பிற்காக வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயில்வதற்காக 47 ஆ‌யிரத்து 427 மாண‌வர்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ‌2017-18-ஆம் ஆண்டில் 46 ஆயிரத்து 144 வெளிநாட்டு மாணவர்களும், இந்திய பல்கலைக்கழகங்களில் பயில பதிவு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2016-17ஆம் ஆண்டு அதிக அளவாக 47 ஆயிரத்து 575 வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் பயில பதிவு செய்திருந்ததாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com