இந்தியாவில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு : 96 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் 96 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பொதுமுடக்கமும் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது. நேற்றுடன் நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கம் முடிவடைய இருந்த நிலையில், மே 31ஆம் தேதி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொருளாதாரம் மற்றும் மக்கள் வருமானத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 96,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109 லிருந்து 36,824 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 157 பேர் கொரோனா வைரஸால் இறந்திருப்பதாகவும், இதுவரை மொத்தம் 3,029 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.