\
கல்லூரிக்கு செல்ஃபோன் கொண்டு செல்ல தடை!

கல்லூரிக்கு செல்ஃபோன் கொண்டு செல்ல தடை!

கல்லூரிக்கு செல்ஃபோன் கொண்டு செல்ல தடை!
Published on: 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்கள் கல்லூரிக்கு செல்ஃபோன்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு படிக்‍கும் மாணவர்கள், கல்லூரிக்‍கு செல்ஃபோன்களை கொண்டுவர தடைவிதிக்‍கப்பட்டுள்ளது. அதையும் மீறி கல்லூரி வளாகத்தில் செல்ஃபோன்களை பயன்படுத்தும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. வகுப்பு நேரங்களில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களை மாணவர்கள் பயன்படுத்தி வந்ததால் இந்த நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com