\
பாகுபலிபோல வலுவானவர்களாக அனைவரும் உருவாக வேண்டும்: குடை பிடித்தபடி பிரதமர் மோடி பேட்டி

பாகுபலிபோல வலுவானவர்களாக அனைவரும் உருவாக வேண்டும்: குடை பிடித்தபடி பிரதமர் மோடி பேட்டி

பாகுபலிபோல வலுவானவர்களாக அனைவரும் உருவாக வேண்டும்: குடை பிடித்தபடி பிரதமர் மோடி பேட்டி
Published on

டெல்லியில் மழை பெய்துவரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி குடைபிடித்தபடி பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ‘’மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடினமான கேள்விகளை கேட்கட்டும்; ஆனால் அமைதியான முறையில் விவாதம் நடக்க ஒத்துழைப்பு தரவேண்டும். அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி போல வலுவானவர்களாக அனைவரும் உருவாக வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com