\
முகம் சிதைந்த நிலையில் திரியும் குரங்கு : கேரளாவில் மற்றொரு பரிதாபம்...!

முகம் சிதைந்த நிலையில் திரியும் குரங்கு : கேரளாவில் மற்றொரு பரிதாபம்...!

முகம் சிதைந்த நிலையில் திரியும் குரங்கு : கேரளாவில் மற்றொரு பரிதாபம்...!
Published on

கேரளாவில் யானை ஒன்று உணவில் வெடி வைக்கப்பட்டு இறந்த நிலையில், தற்போது முகம் சிதைந்த நிலையில் குரங்கு ஒன்று திரிகிறது.

கேரளாவில் சில நாட்களுக்கு முன்னர் யானை ஒன்று வெடி வைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டதால், வாயில் காயம் ஏற்பட்டு பின்னர் பரிதாபமாக ஆற்றில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த சம்பவம் அடங்குவதற்குள், கேரளாவில் தற்போது முகம் சிதைந்த நிலையில் குரங்கு ஒன்று திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வயநாடு பகுதியில் புகைப்பட கலைஞர் ஒருவர் இந்த குரங்கைப் படம் பிடித்துள்ளார். வலது கண் மற்றும் மூக்கு இல்லாத அந்த குரங்கின், முகம் பெருமளவில் சிதைந்த பரிதாப நிலையில் உள்ளது. அத்துடன் கைகளில் காயம் ஏற்பட்டு சீல் வடியும் நிலையில் நகர முடியாமல் அந்த குரங்கு இருக்கிறது. அது சாப்பிட்ட உணவிலிருந்து எதுவும் வெடித்திருக்கலாம் எனப்படுகிறது.

இதுதொடர்பாக ஆய்வு செய்து வருவதாக முதங்கா வனப்பகுதி அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்றைத் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதால் குரங்கு குறித்து தீவிர விசாரணை நடத்த முடியவில்லை என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com