இந்தியா
குழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ
குழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ
குழாயில் இருந்து வீணாகும் தண்ணீரை குரங்கு ஒன்று அடைக்க முயலும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது,
அந்த வீடியோவில், குழாயில் இருந்து தண்ணீர் வீணாகச் சிந்திக்கொண்டிருக்கிறது. குழாயின் பின் பக்கம் அமர்ந்துள்ள குரங்கு, அதை அடைக்க முயற்சிக்கிறது. ஆனால், முடியவில்லை.
‘விலங்குகளுக்கு இதுபோன்ற புத்திசாலித்தனமும் அறிவும் இருக்கும்போது, நம்மை போன்ற மனிதர்களுக்கு என்ன தவறு நடந்தது என்பது எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை?’ என்ற கூறி நிஹரிகா என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
’தண்ணீரை சேமிக்க விலங்குகள் முயற்சிக்கும்போது, ஏன் மனிதர்கள் செய்யக் கூடாது?’ என்று பலர் கருத்துக் கூறியுள்ளனர்.
விலங்குகளிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்று கூறி ஏராளமானோர் அதை ஷேர் செய்து வருகின்றனர்.