ராஜஸ்தானில் உள்ள பள்ளி ஒன்றில் குரங்கு ஒன்று தேசியக்கொடியை ஏற்றியது இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்களும், அமைச்சர்களும் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்காக கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கம்பத்தில் கொடியைக் கட்டி தயாராக வைக்கப்பட்டிருந்தது. கொடி ஏற்ற சிறப்பு விருந்தினர் வருவதற்காக பள்ளி நிர்வாகத்தினர் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த குரங்கு ஒன்று தேசியக்கொடியை ஏற்றி விட்டு ஓட்டிவிட்டது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.