காவல் அதிகாரி தோளில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு - வீடியோ

காவல் அதிகாரி தோளில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு - வீடியோ

காவல் அதிகாரி தோளில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு - வீடியோ
Published on

காவலர் ஒருவரின் தோள்பட்டை மீது அமர்ந்து குரங்கு ஒன்று பேன் பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியின் காவல்நிலையத்தில் காவலர் ஸ்ரீகாந்த திவேதி பணிப்புரிகிறார். இவர் காவல் நிலையத்தில் அமர்ந்து பணி செய்து கொண்டிருக்கும் போது இவரது தோள்பட்டை மீது குரங்கு ஒன்று ஏரி அமர்ந்து கொண்டிருக்கிறது. அத்துடன் அந்தக் குரங்கு திவேதியின் தலையில் உட்கார்ந்து பேன் பார்க்கிறது. 

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் காவலரின் மீது குரங்கு அமர்ந்து பேன் பார்த்தாலும் அவர் சற்றும் சலைக்காமல் தனது பணியை தொடரும் வகையில் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com