பள்ளியில் குரங்கு டான்ஸ்: பிரின்ஸ்பாலுக்கு வேலை போச்சு

பள்ளியில் குரங்கு டான்ஸ்: பிரின்ஸ்பாலுக்கு வேலை போச்சு

பள்ளியில் குரங்கு டான்ஸ்: பிரின்ஸ்பாலுக்கு வேலை போச்சு
Published on

டெல்லியில் பள்ளி ஒன்றில் குரங்காட்டத்துக்கு ஏற்பாடு செய்ததால், அந்த பள்ளி முதல்வரின் பதவி பறிபோனது

டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள கேம்ப்ரிட்ஜ் மாண்டிசேரி தொடக்கப் பள்ளியில் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் குரங்காட்டத்துக்கு பள்ளியின் முதல்வர் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த பள்ளியின் உரிமையாளர் பங்கஜ் குமாரிடம் தொலைபேசியில் மேனகா காந்தி விசாரித்துள்ளார். இதையடுத்து, பள்ளியின் முதல்வரை பங்கஜ்குமார் பணிநீக்கம் செய்தார். குரங்குகளை வைத்து வித்தை காட்டுவது சட்டவிரோதமானது என்று பள்ளி முதல்வர் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார். 1972ம் ஆண்டு இயற்றப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, குரங்குகள் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதனால் குரங்குகளை வேட்டையாடுவது, பொழுதுபோக்குக்குப் பயன்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு ஏழு வருடங்கள் சிறை தண்டனை வரை அளிக்க சட்டத்தில் இடமுண்டு.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com