\
உடும்பை பாலியல் வன்புணர்வு செய்ததாக 3 இளைஞர்கள் கைது - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்

உடும்பை பாலியல் வன்புணர்வு செய்ததாக 3 இளைஞர்கள் கைது - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்

உடும்பை பாலியல் வன்புணர்வு செய்ததாக 3 இளைஞர்கள் கைது - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்
Published on

மகாராஷ்டிராவில் பல்லி வகையை சேர்ந்த உடும்பை பாலியல் வன்புணர்வு செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் இன்று சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த 3 இளைஞர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த செல்போன்களை வாங்கி வனத்துறையினர் சோதித்தனர். அப்போது, சில வாரங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதிக்கு வந்திருந்த அவர்கள், அங்கிருந்த பெரிய வகை பல்லியான உடும்பை பாலியல் வன்புணர்வு செய்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்தனர்.

இதையடுத்து, அவர்கள் மூவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வன விலங்குகளை பாலியல் வன்புணர்வு செய்தால் எந்த வகையான தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதுவும் உடும்பு வகை பல்லிகள் பாதுகாக்க வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் வருவதால், இவர்களின் குற்றம் நிரூபிக்கப்ப்டடால் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும்" என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com