\
அடுத்த ஜனாதிபதி மோகன் பாக்வத்?

அடுத்த ஜனாதிபதி மோகன் பாக்வத்?

அடுத்த ஜனாதிபதி மோகன் பாக்வத்?
Published on

ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பாக்வத் அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் என நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அதன் கூட்டணி கட்சியான சிவசேனா கோரிக்கை வைத்துள்ளது.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மோகன் பகவத் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று கேள்விப்பட்டதாகவும் அதனை வரவேற்பதாகவும், சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் சஞ்சய்ராட் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதற்கான இறுதி முடிவை சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தான் முடிவு செய்வார் எனவும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வேண்டும் என்றால் அக்கட்சினர் மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி-யின் பதவி காலம் ஜுலை மாதம் முடிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com