அம்பாசமுத்திரத்தில் பரப்புரை; மேடையில் குழந்தையை கைகாட்டி பாராட்டிய பிரதமர் மோடி!

அம்பாசமுத்திரத்தில் பிரதமர் மோடி பரப்புரை; மேடையில் குழந்தையை கைகாட்டி பாராட்டிய மோடி
மோடி
மோடிpt

அம்பாசமுத்திரத்தில் நடக்கும் பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மோடி பங்கேற்று, நெல்லை, தென்காசி, விருதுநகர், குமரி, தூத்துக்குடி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையை மேற்கொண்டு பேசிய பொழுது,

”தமிழகத்தில் இருக்கும் தாய்மார்களும் சகோதரர்களும் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள். பல நிபுணர்களுக்கு இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. எப்படி தமிழ்நாட்டில் மோடிக்கு இந்த ஆதரவும் அன்பும் பெருகிவருகிறது என்று அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் படும் சிரமத்தையும், துன்பத்தையும் தெரிந்துக்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் கடந்த பத்து ஆண்டுகளில் 1,25,00,000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்து இருக்கிறோம். 12,00,000 வீடுகள் கட்டி கொடுத்து இருக்கிறோம். 40,00,000 பேருக்கு கியாஸ் இணைப்பு கொடுத்து இருக்கிறோம். 57,00,000 கழிப்பறைகள் கட்டி இருக்கிறோம். 800 கோடி ரூபாய்க்கு கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி செய்து இருக்கிறோம். இப்படி எல்லாம் தொண்டு செய்தால் இவர்களின் அன்பு ஏன் கிடைக்காது?” என்று பேசியுள்ளார்.

நெல்லை சென்னை வந்தேபாரத் சேவையை தொடங்கினோம். தெற்கிலும் புல்லட் ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.தமிழ் புத்தாண்டில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம் எனவும் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com