இந்தியா
''வீரமங்கை வேலுநாச்சியாரை வணங்கி மகிழ்கிறேன்'' - பிரதமர் மோடி ட்வீட்
''வீரமங்கை வேலுநாச்சியாரை வணங்கி மகிழ்கிறேன்'' - பிரதமர் மோடி ட்வீட்
வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி அவரை வணங்கி மகிழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளை அவரை நினைவு கூர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்புக்குரியது என்றும், மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்தியை அவரை வணங்கி மகிழ்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.