“தமிழக வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்” - பிரதமர் மோடி உறுதி

“தமிழக வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்” - பிரதமர் மோடி உறுதி

“தமிழக வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்” - பிரதமர் மோடி உறுதி
Published on

தமிழகத்திலும், ஆந்திராவிலும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறவில்லை என்றாலும் இருமாநில வளர்ச்சியிலும் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் பாரதிய ஜனதாவின் நோக்கமல்ல என்றும், மக்களுக்கு சேவையாற்றுவதே தங்கள் நோக்கம் என்றும் கூறினார். மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்வதே தங்கள் குறிக்கோள் என மோடி தெரிவித்தார். 

வலிமையான ஜனநாயகத்தில் மிக முக்கிய பங்காற்றும் தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயலாற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com