\
அவர்கள் மோடியை ஒழிக என்கிறார்கள்... நான் ஊழல் ஒழிக என்கிறேன்: மோடி

அவர்கள் மோடியை ஒழிக என்கிறார்கள்... நான் ஊழல் ஒழிக என்கிறேன்: மோடி

அவர்கள் மோடியை ஒழிக என்கிறார்கள்... நான் ஊழல் ஒழிக என்கிறேன்: மோடி
Published on: 

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் மோடி ஒழிக என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, தான் ஊழல் ஒழிக என்று கூறுவதாக மோடி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் மாநில வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றார். சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போவதில்லை என்ற மோடி, பகுஜன் சமாஜ் கட்சி சூரியன் உதிக்கிறது என்று சொன்னால், சமாஜ்வாதி கட்சி சூரியன் மறைகிறது என்று சொல்லும் என்று கூறினார். ஆனால் இரண்டு கட்சிகளுமே மோடி ஒழிக என்று சொல்வதில் ஒன்றாக இருக்கின்றன. அவர்கள் மோடி ஒழிக என்கிறார்கள் நான் ஊழல் ஒழிக என்கிறேன். கருப்புப்பணம் ஒழிக என்கிறேன் என்று கூறிய மோடி, எதை ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள் என மக்களைக் கேட்டுக் கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com