பாலியல் குற்றங்கள் செய்வோர் மிருகங்கள் என்றும் அவர்கள் மன்னிக்கப்பட கூடியவர்கள் அல்ல எனவும் "பெண்களை மதிக்க பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய மோடி, முத்தலாக் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.
நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் பெண்கள் உதவுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய அவர், விளையாட்டு முதல் நாடாளுமன்றம் வரை பெண்களின் பங்கு பெருமைக்குரியது என்றும் பெண்களின் உரிமையை காப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிய பிரதமர், பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.