இந்தியா
இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு
இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு
2022க்குள் இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.
விண்வெளி ஆய்வில் எப்போதும் நம் நாடு முன்னிலையில் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் 2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு இந்தியரை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். இந்திய மகனோ அல்லது மகளோ நமது தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு விண்வெளிக்கு பயணிப்பர் என மோடி தெரிவித்தார். விவசாயத்திலும் விஞ்ஞானத்தை இணைத்து வெற்றிகாண்பதே தனது அரசின் குறிக்கோள் என கூறிய மோடி, நாட்டின் கடைக்கோடி கிராமத்திற்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.