\
திறமையான பெண்கள் என மோடி சுட்டிக்காட்டிய இரண்டு பேர்!

திறமையான பெண்கள் என மோடி சுட்டிக்காட்டிய இரண்டு பேர்!

திறமையான பெண்கள் என மோடி சுட்டிக்காட்டிய இரண்டு பேர்!
Published on

பெண்கள் தலைமையில் இந்தியா முன்னேற்றமடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அம்மாநில பா.ஜ.க. மகிளா மோர்ச்சா நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, பெண்கள் முன்னேற்றம் என்ற நிலையில் இருந்து, பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்தை நோக்கி இந்தியா பயணிப்பதாக பெருமிதம் தெரிவித்தார். 

திறமையான பெண்களுக்கு தனது அமைச்சரவையில் முக்கியமான பொறுப்புகளை வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட அவர், அதற்கு எடுத்துக்காட்டாக இரு புகைப்படங்களையும் காண்பித்தார். அதில், பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பதவி வகிப்பதையும், அவர்கள் சர்வதேச தலைவர்களுடன்‌ இருப்பதையும் சுட்டிக்காட்டி மோடி பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com