மக்களவை தேர்தல் 2024 | “கச்சத்தீவை காங்கிரஸ், திமுகதான் இலங்கைக்கு தாரைவார்த்தன” - பிரதமர் மோடி

"எந்த அமைச்சரவையில் கச்சத்தீவு முடிவு எடுக்கப்பட்டது என்று நமக்கு தெரியும். யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது என்று மக்களுக்கு தெரியும். ஆனால் அதை சொல்லாமல் காங்கிரஸ் கட்சியானது மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தியா முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நேற்று முதல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் வேலூரில் நடந்த பாஜகவின் பரப்புரை கூட்டத்தில் இன்று கலந்துகொண்ட பேசிய மோடி, “நண்பர்களே.. இன்று காங்கிரஸ் மற்றும் திமுக-வின் முகங்கள், போலியான முகங்கள் என்று மக்களுக்கு புரிந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது, அக்கட்சிதான் நமது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து தந்துவிட்டது.

மோடி - கச்சத்தீவு
கச்சத்தீவைவிட வளம் கொண்ட வாஜ் பேங்கை இந்தியாவிற்கு சொந்தமாக்கிய இந்திரா காந்தி! மிரளவைக்கும் வரலாறு!

எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று நமக்கு தெரியும். யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது என்று மக்களுக்கு தெரியும். ஆனால் இதையெல்லாம் சொல்லாமல் காங்கிரஸ் கட்சியானது மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com