இந்தியா
சிறப்பான வளர்ச்சியைக் காணும் உத்தரப் பிரதேசம்: யோகிக்கு பிரதமர் மோடி பாராட்டு
சிறப்பான வளர்ச்சியைக் காணும் உத்தரப் பிரதேசம்: யோகிக்கு பிரதமர் மோடி பாராட்டு
யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேச மாநிலம் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
லக்னோவில் நடந்த ஏ.பி.ஜே அப்துல்கலாம் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஆதித்யநாத் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தடையின்றி மின்சாரம் கிடைக்க வழி செய்துள்ளது சிறப்பானது எனவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். முன்னதாக பல்கலைக்கழகத்தின் புதிய பிரிவை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் மாநில ஆளுநர் ராம்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.