மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ‘ராகேஷ்’ நாய் மரணம்!

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ‘ராகேஷ்’ நாய் மரணம்!

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ‘ராகேஷ்’ நாய் மரணம்!
Published on

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்த நாய் தற்போது உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளது.

பிரதமர் மோடி ஒருமுறை மன் கி பாத் நிகழ்ச்சியில், ராகேஷ் என்ற ஒரு நாயைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  ஆயுதப்படையைச் வீரர்கள் சாலையோரத்தில் வசிக்கும் நாய்களையும் பாதுகாத்து பராமரிப்பது அதில் குறிப்பிட்டிருந்தார். அவர் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நாய் செவ்வாய்க்கிழமை கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால 5 இறந்துவிட்டது. அந்த நாயை ஆயுதப்படையை சேர்ந்த வீரர்கள் சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்துள்ளனர்.

இதுபற்றி மோட்டார் மற்றும் போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த தலைமை கான்ஸ்டபிள் ஆசிஸ்-உர்-ரெஹ்மான் கான் கூறுகையில், ’’பயிற்சி வீரர்கள் வழக்கமாக செல்லும் இடமாக ராகேஷின் டீஸ்டால் இருந்தது. அவர் ஒரு சாலையோர நாயை பராமரித்து வந்தார். கொரோனா காரணமாக ராகேஷ் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், அந்த நாய் இங்கு தனியாக தவித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த பயிற்சி ராணுவ வீரர்கள் அந்த நாய்க்கு டீக்கடைக்காரரின் பெயரையே வைத்து, ராகேஷ் என்று அழைத்ததுடன், பராமரித்தும் வந்தனர். 5 வயதான அந்த நாய் தற்போது பிரிந்துசென்றது வருத்தமளிக்கிறது’’ என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com