இந்தியா
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: மோடி உட்பட 10,000 பேருக்கு அழைப்பு!
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 10 ஆயிரம் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது என ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 15 முதல் 24 வரை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு, நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வர் என கணிக்கப்படுகிறது. இதனால், அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகள் கோயில் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

pm modipt desk
இந்நிலையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 10 ஆயிரம் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஜனவரிக்குள் கட்டுமானத்தை முடிப்பதற்காக 24மணி நேரமும் பணி நடந்து வருகிறது.