இந்தியா
நாடு முழுவதும் முழு வீச்சிலான தடுப்பூசி திட்டம்
நாடு முழுவதும் முழு வீச்சிலான தடுப்பூசி திட்டம்
தடுப்பூசி மூலம் தவிர்க்க கூடிய நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை இனியும் இருக்க கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வாத் நகரில் முழு வீச்சிலான தடுப்பூசி திட்டத்தை தொடக்கி வைத்து அவர் இவ்வாறு தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 2 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் இதுவரை இரண்டரை கோடி குழந்தைகளுக்கும் 68 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.