கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ விசாரணை : மத்திய அரசு தகவல்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ விசாரணை : மத்திய அரசு தகவல்
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ விசாரணை : மத்திய அரசு தகவல்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது விசாரணை நடத்தக்கோரி சிபிஐ-க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் ஏராளமானோர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற தேர்தல் ஆய்வு நிறுவனம், ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பயனாளர்களின் தகவலை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது விசாரணை நடத்த சிபிஐ-க்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவாதத்தின் போது மத்திய அரசு இதனை தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இதுவரை பதில் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com