\
இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர்: மோடியுடன் திறந்த வாகனத்தில் ‘ரோடு ஷோ’

இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர்: மோடியுடன் திறந்த வாகனத்தில் ‘ரோடு ஷோ’

இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர்: மோடியுடன் திறந்த வாகனத்தில் ‘ரோடு ஷோ’
Published on

ஜப்பான் பிரதமர் ஷின்சோ ஆபே 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் ஜப்பான் பிரதமரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

ஜப்பான் பிரதமரின் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கிடையில் இரு தலைவர்களும் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஏராளமான மக்கள் சாலையில் இரு மருங்கிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற ஜப்பான் பிரதமர் மற்றும் அவரது மனைவிக்கு காந்தியடிகள் தங்கியிருந்த அந்த இடத்தின் சிறப்பு குறித்து பிரதமர் மோடி விளக்கினார். இதைத் தொடர்ந்து அகமதாபாத் - மும்பை இடையே செயல்படுத்தப்படவுள்ள புல்லட் ரயில் திட்டத்திற்கு இரு தலைவர்களும் நாளை அடிக்கல் நாட்ட உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com