”மோடி, யோகி ஆதித்யநாத் என்றாலே அவர்களுக்கு பயம்” - தேர்தல் பரப்புரையில் பிரதமர் பேச்சு
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகும் மார்ச் 10ஆம் தேதியன்று பாரதிய ஜனதாவின் வெற்றியை வண்ணமயமாகக் கொண்டாட மக்கள் தயாராகிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஃபதேபூரில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பிரதமர், கொரோனா தடுப்பூசியைப் பார்த்து இரண்டு பேர் அஞ்சுகின்றனர் - ஒருவர் கொரோனா - மற்றொருவர் தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் என்று விமர்சித்தார். இவர்களுக்கு நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத், கொரோனா தடுப்பூசி என்றால் பிரச்னை என்று பிரதமர் குறிப்பிட்டார். முத்தலாக் தடையைக்கூட அவர்கள் எதிர்த்தனர் என எதிர்க்கட்சிகளை மோடி கடுமையாக சாடினார்.
நாட்டில் உள்ள பெண்களின் நலன் பற்றி தான் சிந்திக்க வேண்டாமா? என்று அவர் வினவினார். ஏழைகளுக்கு சுகாதாரத் திட்டங்கள், வீடுகள், கழிப்பறைகள் போன்ற வசதிகளை செய்து தருவதால் தங்களது வாக்கு வங்கி அழிந்து வருவதாக எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன என்றும் பிரதமர் மோடி பேசினார்.