பூடான் இளவரசரை கொஞ்சி மகிழ்ந்த மோடி

பூடான் இளவரசரை கொஞ்சி மகிழ்ந்த மோடி

பூடான் இளவரசரை கொஞ்சி மகிழ்ந்த மோடி
Published on

டெல்லி வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல், தனது குடும்பத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.   

 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது அவருடன் அவரது மனைவி ஜெட்சன் பெமா மற்றும் தம்பதியரின் குட்டி இளவரசரும் உடனிருந்தனர். மன்னருடனான அதிகாரப்பூர்வமான சந்திப்பிற்கு பிறகு, மோடி மன்னரின் குடும்பத்தினரிடம் உரையாடினார். பூடான் நாட்டின் பாரம்பரிய உடையில் வந்த குட்டி இளவரசர் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். பின்பு மோடி, இளவரசருக்கு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட்ட கால்பந்து மற்றும் செஸ் போர்டு ஆகியவற்றைப் பரிசாக வழங்கினார். மோடி, மன்னருடன் பேசிக்கொண்டிருக்கும் போது குட்டி இளவரசன் செய்த சுட்டித்தனத்தை பார்த்து வியப்படைந்த மோடி அவரை தூக்கிக் கொஞ்சினார்.

முன்னதாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் தனது மனைவி ஜெட்சன் பெமாவுடன் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். இந்தியாவிற்கு வருகை தந்த பூடான் குட்டி இளவரசரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்திலும் பூடான் மன்னர் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com