மோடியுடன் தொலைபேசியில் உரையாடும் ட்ரம்ப்

மோடியுடன் தொலைபேசியில் உரையாடும் ட்ரம்ப்

மோடியுடன் தொலைபேசியில் உரையாடும் ட்ரம்ப்
Published on

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் ட்ரம்ப், முதல்முறையாக இன்று இரவு 11.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச இருக்கிறார். அதிபர் மாளிகை வட்டாரங்கள் இதை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப், கடந்த 20ஆம் தேதி பொறுப்பேற்றார். அதன் பிறகு, கனடா பிரதமர் மற்றும் மெக்சிகோ அதிபருடன் பேசினார். தொடர்ந்து இஸ்ரேல் பிரதமருடனும், எகிப்து அதிபருடனும் ட்ரம்ப் உரையாற்றினர். இதனை அடுத்து ட்ரம்ப் , மோடியுடன் பேச முடிவு செய்துள்ளார். அமெரிக்க நேரப்படி பகல் 1 மணிக்கு, இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு இந்தியப் பிரதமருடன் இன்று தொலைபேசியில் பேசுகிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com