ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள பிரத்யேக தடுப்பூசி

ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள பிரத்யேக தடுப்பூசி

ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள பிரத்யேக தடுப்பூசி
Published on

ஒமைக்ரான் வகை கொரோனாவிலிருந்து காத்துக் கொள்வதற்காக, MODERNA நிறுவனம் பிரத்யேக தடுப்பூசிக்கான பரிசோதனையை தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒமைக்ரானிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவிலுள்ள பயோடெக் நிறுவனமான, MODERNA , ஒமைக்ரான் பாதிப்பிற்காக பிரத்யேக பூஸ்டர் தடுப்பூசி தயாரிப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இரண்டு டோஸ் MODERNA தடுப்பூசி போட்டுக்கொண்ட 600 பேரிடம் இந்தச் சோதனையை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com