புதிய வலிமை... கடற்படையில் ஏகப்பட்ட வசதிகளுடன் கூடிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்

புதிய வலிமை... கடற்படையில் ஏகப்பட்ட வசதிகளுடன் கூடிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்
புதிய வலிமை... கடற்படையில் ஏகப்பட்ட வசதிகளுடன் கூடிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்

உள்நாட்டிலேயே பெருமளவு உருவாக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம்தாங்கி போர்க்கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்டம்பர் 3ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெற உள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் முக்கிய அம்சங்கள்:

நீளம் -- 262 மீட்டர்கள்
அகலம் -- 62 மீட்டர்கள்
உயரம் -- 59 மீட்டர்கள்
எடை -- 45,000 டன்கள்
அதிகபட்ச வேகம் -- 28 நாட்

7500 நாட்டிக்கல் மைல் வரை தொடர்ந்து பயணிக்கும் வல்லமை படைத்தது ஐஎன்எஸ் விக்ராந்த்

30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்கக் கூடிய வல்லமை உடையது.

மிக் விமானங்கள் மற்றும் MH-60 ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இந்த விமானத்திலிருந்து இயக்கலாம்.

நவீன ஏவுகணைகளையும் தாங்கிச் சென்று எதிரிகளை தாக்கும் வல்லமை கொண்டது. அத்துடன் பல்வேறு வகையான தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் ஆகியவற்றையும் பொருத்தும் வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன.

15 அடுக்குகள் கொண்ட இந்தக் கப்பலில் ஒரு சிறிய மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன

எரிவாயுவால் இயங்கும் நான்கு இன்ஜின்களை கொண்டு இந்த கப்பல் பயணிக்கிறது.

மேலும் இந்தக் கப்பலில் 17 ஆயிரம் கடற்படை வீரர்கள் ஒரே நேரத்தில் பயணிக்கலாம். சுமார் 2300 தங்கும் அறைகளுடன் இந்த போர்க்கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

20,000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த போர்க்கப்பலை பிஎச்இஎல் மற்றும் எல்என்டி உள்ளிட்ட கிட்டத்தட்ட 500 இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளன. மற்றும் 76% வரை இந்த போர்க்கப்பல் இந்தியாவிலேயே, இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன விமானம்தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆனது இந்திய கடற்படைக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. மேலும் இது இந்து மகாசமுத்திரத்தில் இந்திய கடற்படைக்கு வலுசேர்த்து கடல் எல்லைகளை காக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய நவீன விமானம்தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்-ஐ செப்டம்பர் 3ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெற உள்ள மாபெரும் தொடக்க விழாவில் இந்திய கப்பல் படையிடம் பிரதமர் மோடி ஒப்படைக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com