இந்தியா
ஓடும் கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை
ஓடும் கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை
சென்னையில் இருந்து டெல்லி சென்ற கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன
சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்போன்கள் கண்டெய்னரில் கொண்டு செல்லப்படுகின்றன. இரவு பகலாக கண்டெய்னர் பயணம் செய்யும் நிலையில் இடையே ஓடும் லாரியில் கொள்ளை போவது வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து டெல்லி சென்ற கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தெலங்கானா பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் 3 முறை கண்டெய்னர்களில் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.