செல்போன் வாடிக்கையாளர்களின் விவரங்கள் விரைவில் ஆதார் எண் மூலம் மீண்டும் சரிபார்க்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
செல்போன் இணைப்பு சேவை அளிக்கும் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாரத்தில் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். இதன் படி ஏற்கனவே செல்போன் சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஆதார் எண் மூலம் மீண்டும் சரிபார்க்கப்படும். இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு முறையான அறிவிப்புகளை வெளியிடும் படி தொலைதொடர்பு துறை சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு சுற்று அறிக்கை அனுப்பியுள்ளது. இந்த விவரங்கள் சரிபார்ப்பு பணிக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என செல்போன் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.