\
நடுவானில் விமானத்தில் எரிந்த செல்ஃபோன்

நடுவானில் விமானத்தில் எரிந்த செல்ஃபோன்

நடுவானில் விமானத்தில் எரிந்த செல்ஃபோன்
Published on

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, பயணி ஒருவரது செல்போன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பீதி ஏற்பட்டது.

டெல்லியிலிருந்து, இந்துாருக்கு நேற்று முன்தினம் ஜெட் ஏர்வேஸ் விமானம் 120 பேருடன் சென்று கொண்டிருந்தது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பயணி ஒருவரது செல்போன் போன் திடீரென, தீப்பற்றி எரிந்தது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்துக்கு ஏதும் ஆபத்து நேருமோ என்று பீதியடைந்தனர்.  பின்னர், விமானத்தில் இருந்த தீயணைக்கும் கருவியை இயக்கினர். அது வேலை செய்யவில்லை. பின்னர் தண்ணீருக்குள் மொபைல் போனை போட்டு தீயை அணைத்தனர். சிறிது நேரத்தில் விமானம், பத்திரமாக இந்துாரில் தரை இறங்கியதையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com