அமித் ஷா ஜம்மு காஷ்மீர் பயணம் எதிரொலி: தற்காலிகமாக முடங்கியது இணைய சேவை!

அமித் ஷா ஜம்மு காஷ்மீர் பயணம் எதிரொலி: தற்காலிகமாக முடங்கியது இணைய சேவை!

அமித் ஷா ஜம்மு காஷ்மீர் பயணம் எதிரொலி: தற்காலிகமாக முடங்கியது இணைய சேவை!
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் இணையதள சேவை வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிக பதற்றம் நிறைந்த இடங்களில் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் சார்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறைத்துறை டிஜிபி, அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனை அடுத்து ரஜோரி உள்ளிட்ட சில முக்கியமான மாவட்டங்களில் இணையதள சேவை என்பது முடக்கப்பட்டுள்ளது. தேசவிரோத சக்திகள் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படுத்தாமல் இருக்க தடுக்கும் வகையில் இன்று மாலை 7 மணி வரை இந்த இணையதள சேவை முடக்கம் என்பது அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com