இரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வீட்டு முன் நி்றுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய இளைஞர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
விஜயவாடாவில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் சிவசங்கரன் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய சிவசங்கரன் தன்னுடைய காரை வீட்டின் முன்பு வழக்கம் போல் நிறுத்தி இருந்தார். நள்ளிரவு தாண்டிய பின் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள், சிவசங்கரனின் காருக்கு தீ வைத்து தப்பி சென்றனர். மேலும் அதே பகுதியில் அருகில் இருக்கும் சிவன் கோயில் வீதியில் நி்றுத்தப்படிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் சிலர் தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றனர்.
காருக்கு தீ வைக்கப்பட்டது பற்றி ரியல் எஸ்டேட் அதிபர் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சத்திய நாராயணபுரம் போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்படிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.