ஜார்க்கண்டில் காங். கூட்டணி அமோக வெற்றி - முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டில் காங். கூட்டணி அமோக வெற்றி - முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்டில் காங். கூட்டணி அமோக வெற்றி - முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

கனிமவளங்கள் நிறைந்த மாநிலமான ஜார்க்கண்டில் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. 81 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ், ஜேஎம்எம் கட்சியும் மாறி மாறி முன்னிலை வகித்தன. பின்னர் நண்பகல் முதல் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி வலுவாக முன்னிலை பெற்று முன்னேறியது.

மாலை 6.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களிலும் பாஜக 25 இடங்களிலும், ஜேவிஎம் 3, தொகுதிகளிலும் மற்றவை 7 இடங்களில் வென்றுள்ளன. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதையடுத்து, அக்கட்சிகளின் தொண்டர்கள் டெல்லியிலும், ராஞ்சியிலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அதிக இடங்களில் போட்டியிட்டு, கூடுதல் இடங்களை வென்றிருப்பதால், அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராவார் என ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மகாராஷ்ட்ராவில் ஆட்சியை பறிகொடுத்த பாஜக, இப்போது ஜார்க்கண்டிலும் ஆட்சியை இழந்திருக்கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் மாநிலம் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி அடைய வாழ்த்துகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com