புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!

புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!

புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
Published on

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நமச்சிவாயம் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகியதோடு வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இருவரும் சபாநாயகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இதனால் புதுச்சேரியில் 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் குறைந்துள்ளது. 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் 15 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தோடு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் குறைந்துள்ளது. இந்த ராஜினாமாவை தொடர்ந்து நமச்சிவாயம் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com