\
கொரோனா நிலவரம்: பிரதமர் மோடி ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

கொரோனா நிலவரம்: பிரதமர் மோடி ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

கொரோனா நிலவரம்: பிரதமர் மோடி ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
Published on

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அதில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை உயர்த்தவேண்டும் என முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். மேலும் ரெம்டெசிவிர் மருந்து குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார். முதல்வருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும், தலைமை செயலாளர் வெ. இறையன்பும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட ஆட்சியர்களும் பிரதமரின் ஆலோசனையில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனையில் முதன்முறையாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com