\
மிசோரம் இஞ்சி
மிசோரம் இஞ்சிpt web

இந்தியாவின் இஞ்சி மையம் மிசோரம்; ஏன்?

இந்தியாவில் விளையும் நறுமணமிக்க இஞ்சிக்கு உலகளவில் எப்போதும் தனி மவுசு உண்டு. ஆனால், இந்தியாவின் 'இஞ்சி மையம்' என போற்றப்படும் பெருமை மிசோரம் மாநிலத்தையே சாரும். அது ஏன்?
Published on: 

இந்தியாவில் விளையும் நறுமணமிக்க இஞ்சிக்கு உலகளவில் எப்போதும் தனி மவுசு உண்டு. ஆனால், இந்தியாவின் 'இஞ்சி மையம்' என போற்றப்படும் பெருமை மிசோரம் மாநிலத்தையே சாரும். அது ஏன்?

உயர்தர இஞ்சி உற்பத்தியின் காரணமாக, நிதி ஆயோக் அமைப்பால் மிசோரம் மாநிலத்திற்கு இஞ்சித் தலைநகர் என்ற சிறப்புப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்குச் சுமார் 2,000 முதல் 3,200 மில்லிமீட்டர் மழை மற்றும் அமிலத்தன்மை கொண்ட மிதவெப்பமண்டல மண் வளம் மிசோரமில் இஞ்சி அமோகமாக விளைய உதவுகிறது.

mizoram ginger
mizoram gingerpt web

மிசோ இஞ்சியில் ஓலியோரெசின் ((Oleoresin)) அளவு அதிகம், குறைந்த நார் மற்றும் சக்திவாய்ந்த காரத்தன்மை இருப்பதால், மருந்து தயாரிப்பு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரிய கிழங்கு வடிவம், தனித்துவமான நறுமணம் மற்றும் நிறம் கொண்ட இந்த இஞ்சிக்கு 2021ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

வெறும் உற்பத்தியோடு நிற்காமல், ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டல் மூலம் மிசோரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முதன்மைப் பணப்பயிராகத்
திகழ்கிறது இந்த மிசோ இஞ்சி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com