கணவருடன் கடலுக்கு சென்று காதலருடன் மாயமான மனைவி: மீட்பு பணியால் நொந்துப்போன போலீஸ்!

கணவருடன் கடலுக்கு சென்று காதலருடன் மாயமான மனைவி: மீட்பு பணியால் நொந்துப்போன போலீஸ்!

கணவருடன் கடலுக்கு சென்று காதலருடன் மாயமான மனைவி: மீட்பு பணியால் நொந்துப்போன போலீஸ்!
Published on

திருமண நாளை கொண்டாட கணவருடன் கடற்கரைக்கு சென்ற மனைவி கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக எண்ணி தீவிர தேடலில் ஈடுபட்டு வந்த நிலையில், இறுதியில் வெளியான தகவல் போலீசாரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

ஐதராபாத்தில் உள்ள ஃபார்மா கம்பெனியில் பணியாற்றி வருபவர் ஸ்ரீநிவாஸ். இவருக்கும், 20 வயதை கடந்த சாய் ப்ரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி திருமணமாகியிருக்கிறது.

இப்படி இருக்கையில் தங்களுடைய இரண்டாமாண்டு திருமணநாளை கொண்டாடுவதற்காக ஸ்ரீநிவாஸும், சாய் ப்ரியாவும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரைக்கு கடந்த ஜூலை 25ம் தேதி சென்றிருக்கிறார்கள்.

அங்கு இருவரும் பேசி, செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீநிவாஸுக்கு செல்ஃபோனில் அழைப்பு வரவே அவர் சற்று நகர்ந்து சென்று பேசியிருக்கிறார். ஃபோனில் பேசிவிட்டு வந்து பார்த்தபோது மனைவி சாய் ப்ரியா இல்லாததை கண்டு அதிர்ச்சியுற்ற ஸ்ரீநிவாஸ் ஒருவேளை கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டிருப்பாரோ என்று பதறிப்போய் 3 டவுன் போலீசாரை அணுகி நடந்ததை கூறியிருக்கிறார்.

இதனையடுத்து கடற்படை காவலர்களுடன் இணைந்து போலீசார் சாய் ப்ரியாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போதும் கிடைக்காததால் ஹெலிகாப்டர், கப்பல் போன்ற கடற்படையின் உதவி மூலமும் தீவிரமாக தொடர்ந்து தேடி வந்திருக்கிறார்கள்.

சாய் ப்ரியா காணாமல் போன விவகாரம் விசாகப்பட்டின நகரத்தின் மேயர் வரை சென்றிருக்கிறது. ஆனால் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டாலும், கடைசி வரைக்கும் கடலுக்குள் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் சாய் ப்ரியா மீட்கப்பட்டபாடில்லை. இதனால் கணவர் ஸ்ரீநிவாஸ் கவலையுற்று போயிருக்கிறார்.

இப்படி இருக்கையில், மனைவி சாய் ப்ரியா பத்திரமாகதான் இருக்கிறார் என்பது அவரது செல்ஃபோன் சிக்னல் பெங்களூருவில் இருப்பதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அதில் என்ன திருப்புமுனை என்றால், சாய் ப்ரியா தனது தாயாருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் தான் பத்திரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே ஆந்திராவின் நெல்லூரில் ஒரு முறை சாய் ப்ரியாவின் செல்ஃபோன் சிக்னல் செயல்பாட்டில் இருந்ததும் போலீசார் கவனத்திற்கு சென்றிருக்கிறது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஸ்ரீநிவாஸுடனான திருமண வாழ்க்கையில் சாய் ப்ரியாவுக்கு விருப்பம் இல்லை என்பதும், திருமணத்துக்கு முன்பே ரவி என்ற நபரை அவர் காதலித்ததும், தனது திருமணத்திற்கு பின்பும் சாய் ப்ரியா ரவி உடனான உறவை நீடித்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

ஆகவே ஆர்.கே.பீச்சில் இருந்து சாய் ப்ரியா ரவியுடனேயே சென்றிருக்கக் கூடும் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கடல் அலையில் சிக்கியதாக கருதப்பட்டு அதற்காக மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிக்கு இதுவரையில் ஒரு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாகவும், 3 டவுன் போலீசார் ராமாராவ் தெரிவித்திருக்கிறார்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com