\
பாலியல் வன்கொடுமை செய்து 7 வயது சிறுவன் கொலை: பேருந்து நடத்துனர் வெறிச்செயல்

பாலியல் வன்கொடுமை செய்து 7 வயது சிறுவன் கொலை: பேருந்து நடத்துனர் வெறிச்செயல்

பாலியல் வன்கொடுமை செய்து 7 வயது சிறுவன் கொலை: பேருந்து நடத்துனர் வெறிச்செயல்
Published on

டெல்லியில் 5 வயது பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 2 நாட்களில், 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வரும் 7 வயது பள்ளிச்சிறுவன், பள்ளிப்பேருந்து நடத்துனரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணையில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் கொலை செய்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள தாகூர் பள்ளியிலும் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை போலீஸார் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி உதவியாளராக பணிபுரிந்து வந்த 40 வயது விகாஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், மதிய உணவு நேரத்தில் ஆசிரியர்கள் உணவு உண்டு கொண்டிருக்கும்போது சிறுமியை வகுப்பறைக்குள் இழுத்துச் சென்ற விகாஷ், அங்கு பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையாரிடமும் சொல்லக்கூடாது என்றும் விகாஷ் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து மன அழுத்தத்தில் இருந்த சிறுமி ஒரு கட்டத்தில் பெற்றோர்களிடம் உண்மையைக் கூற, அவர்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் குற்றவாளியை கைது செய்த போலீஸார் அவரை பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com