வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

போர்க் காலங்களில் தொலைதூரத்தில் வரும் எதிரி நாட்டின் விமானத்தை தரையில் இருந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) அண்மையில் தயாரித்தது. சென்சார், ரேடார் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம் பலாசோரில் இன்று சோதித்து பார்க்கப்பட்டது.

இதற்காக வான் பரப்பில் தொலைதூரத்தில் அதிவேகமாக செல்லும் விமானம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, ஏவுகணையை இயக்கியவுடன் அது தரையில் இருந்து பாய்ந்து சென்று குறிப்பிட்ட நேரத்தில் அந்த விமானத்தை துல்லியமாக தாக்கி அழித்தது.

ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை டிஆர்டிஓ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி கொண்டாடினர். சோதனை வெற்றி அடைந்ததால் இந்திய ராணுவத்தில் விரைவில் இந்த ஏவுகணை இணைக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com