\
பிரபஞ்ச அழகிப் போட்டி....ரோஷ்மிதா ஹரிமூர்த்தி பங்கேற்பு

பிரபஞ்ச அழகிப் போட்டி....ரோஷ்மிதா ஹரிமூர்த்தி பங்கேற்பு

பிரபஞ்ச அழகிப் போட்டி....ரோஷ்மிதா ஹரிமூர்த்தி பங்கேற்பு
Published on: 

2017-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ரோஷ்மிதா ஹரிமூர்த்தி கலந்து கொள்கிறார்.

2017-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டுள்ள ரோஷ்மிதா ஹரிமூர்த்திக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான லாரா தத்தா பூபதி. இவர் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பங்கேற்று பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். மேலும் அவர் ரோஷ்மிதா ஹரிமூர்த்தி மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் அவர் வெற்றி பெற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்த 86 பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு 12 பேருக்கு மட்டுமே உள்ளது.

கடந்த 1994-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று அழகிப் பட்டத்தை தட்டிசென்ற சுஷ்மிதா சென் இந்தப்போட்டியில் நடுவராக பங்கேற்கிறார். ரோஷ்மிதா ஹரிமூர்த்தி வெற்றி பெற சுஷ்மிதா சென் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com