'ரொம்ப குண்டாயிட்டீங்க!' - மிஸ் யுனிவர்ஸை உருவக்கேலி செய்த நெட்டிசன்ஸ்

'ரொம்ப குண்டாயிட்டீங்க!' - மிஸ் யுனிவர்ஸை உருவக்கேலி செய்த நெட்டிசன்ஸ்
'ரொம்ப குண்டாயிட்டீங்க!' - மிஸ் யுனிவர்ஸை உருவக்கேலி செய்த நெட்டிசன்ஸ்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு, பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய அழகியான ஹர்னாஸ் சந்து, உடல் உடை அதிகரித்து காணப்படுவதால் சமூகவலைத்தளங்களில் உருவக்கேலிக்குள்ளாகியுள்ளார்.

இஸ்ரேலின் எய்லட் நகரில் உள்ள யுனிவர்ஸ் டோமில், 2021-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், இறுதியில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து, மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு 2000-ம் ஆண்டில் லாரா தத்தாவும், அதற்கு முன்னதாக 1994-ல் சுஷ்மிதா சென்னும் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தனர். 21 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் இந்தியரான ஹர்னாஸ் சந்து இந்தப்பட்டத்தை வென்றதால் ஒரே நாளில் அவர் புகழின் உச்சத்துக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற ‘லாக்மி பேஷன்’ ஷோவில் கலந்துகொண்ட மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்து, உடல் எடை அதிகரித்து காணப்பட்டதால் நெட்டிசன்களால் உருவக்கேலிக்குள்ளாகியுள்ளார். இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவலுக்குப் பின்பு தலைநகர் டெல்லியில், லாக்மி பேஷன் வார விழா, கடந்த 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த விழாவில், பேஷன் டிசைனர்களின் உடைகளை பிரபலப்படுத்தும் வகையில், தென்னிந்திய நடிகைகளான பூஜா ஹெக்டே, ஸ்ருதிஹாசன், பாலிவுட் நடிகைகளான ஜான்வி கபூர், கீர்த்தி சனான், அனன்யா பாண்டே, மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்து உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேஷன் விழாவின் 4-வது நாளில், இரட்டையர் டிசைனர்களான நரேஷ் மற்றும் ஷிவனின் உடைகளை பிரபலப்படுத்தும், முதன்மையாளராக மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்து கலந்து கொண்டார். ஆரஞ்சுநிற வெல்வெட் உடையில் அவர் ராம்ப் வாக் செய்தநிலையில், இந்த புகைப்படத்தை நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

இதையடுத்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றபோது ஒல்லியாக இருந்த ஹர்னாஸ் சந்து, 3 மாதங்களில் உடல் எடை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாமல் காணப்படுவதை, நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். எனினும், நெட்டிசன்கள் சிலர் ஹர்னாஸ் சந்துவிற்கு அதரவு தெரிவித்து, இந்த உடையில் அவர் மிகவும் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com