இன்றைய இணைய உலகில் வீடியோ எடிட் செய்ய ஒரு செயலி இருந்தால் போதும். பலரும் சுயமுன்னேற்ற காணொளிகளை எடிட் செய்து தங்களது பக்கங்களில் பதிவேற்றிவிடுகின்றனர். அதில் சில பெருந்தலைவர்களின் மேற்கோள்களும் அடக்கம். ஆனால் அதில் சில மேற்கோள்கள் அந்த தலைவர்களால் சொல்லப்படாததாக இருக்கும். அப்படி மகாத்மா காந்தி சொல்லாத சில மேற்கோள்கள் அவர் சொல்லியதாக தவறாக பரப்பப்பட்டு வருகின்றன. அவை குறித்து இதில் பார்க்கலாம்.
மகாத்மா காந்தி கூறியதாக அதிகமாக எடுத்துக் காட்டப்படும் மேற்கோள்களில் ஒன்று இது. அவர் கூறியதாக கூறப்படுவது, “நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடிந்தால் உலகின் போக்குகளும் மாறும். மனிதன் தனது சுயஇயல்புகளை மாற்றுவது போல், அவனைப் பற்றிய உலகின் அணுகுமுறையும் மாறுகிறது.. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாட்க்க நாம் காத்திருக்க வேண்டியதில்லை” என்பது தான். ஆனால், காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருங்கள் என்ற துல்லியமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார் என்ற உறுதியான ஆதாரங்கள் இல்லை என கூறப்படுகிறது.
விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் இந்த மேற்கோளை காந்தியின் மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறார்கள். ஆஸ்திரேலிய ஆய்வாளர், புத்தக ஆசிரியர் பிலிப் ஜான்சன் கூற்றுப்படி, அறியப்படாத எழுத்தாளர் ஒருவரால் இது காந்தியின் மேற்கோள் என நிறுவப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் படி, மகாத்மா காந்தி இந்த அறிக்கையை உருவாக்கவில்லை என்றும் 1918 ஆம் ஆண்டில் நடந்த மாநாடு ஒன்றில் அமெரிக்க தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் க்ளீன் என்பவர் இந்த மேற்கோளை உபயோகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேற்கோள் காந்தியால் சொல்லப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. 1982 ஆம் ஆண்டு வெளியான காந்தி திரைப்படத்தில் காந்தியாக நடித்த நடிகர் பென் கிங்ஸ்லி இந்த வரியை கூறியுள்ளார். ஆனால் காந்தி இந்த வார்த்தைகளை பயன்படுத்தியதற்கான வரலாற்றுப் பதிவுகள் ஏதும் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.