\
திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் காயம்: மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் காயம்: மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் காயம்: மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி
Published on

திருமலை திருப்பதி கோவிலில் மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர்.

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் சோதனை செய்யப்படும் பகுதியில், நேற்று மாலை மின் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஸ்கேனிங் செய்யும் பகுதியில் ஷாக் அடித்ததாக சத்தம் போட்டுள்ளார். அதனால் சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக பக்தர்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து ஓடத் தொடங்கினர். இதனால் நெரிசல் அதிகமாகி சிலர் மிதிபடும் சூழல் ஏற்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த 6 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், எலெக்ட்ரீஷின்கள் அழைத்துவரப்பட்டு மின்கசிவு குறித்து சோதனை நடத்தப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com